25 Mar 2015

பசுகாதாரச் சீர்கேடு, போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல் முதலானவை வறுமையின் விளைவுகளேயாகும் - வசந்தராஜா

SHARE
நோயற்ற சமூகம் ஒன்றினை உருவாக்குவதற்காக சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கடுமையாக உழைக்கின்றார்கள். ஆனால் மக்களது ஒத்துழைப்பு போதாமை காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த பாடாக இல்லை. பொது வைத்தியசாலைகளும், தனியார் வைத்தியசாலைகளும் நோயாளர்களினால் நிரம்பி வழிகின்றன. தொற்று நோய்களினால்த்தான் அதிகளவு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத்தரலைவர் த.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்ளப்பு மாவட்டம்  சித்தாண்டிப் பகுதியில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  பொது மக்களுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், ஒக்ஸ்பாம், எஸ்க்கோ ஆகிய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட சுகாதார மேம்பாட்டுக்கான விழ்ப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்திட்டம் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு மக்கள் மத்தயில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

மக்கள், சுத்தம் சுகாதாரத்தை சரியான முறையில் கடைப்பிடித்தால் பெரும்பாலான நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அறிவில் வறுமையாக இருப்பதனாலும் பொருளாதாரத்தில் வறுமையாக இருப்பதனாலும் சுத்தம் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில் மக்கள் இயலாதவர்களாக இருக்கின்றனர். சுகாதாரச் சீர்கேடு, போசாக்கின்மை, பாடசாலை இடைவிலகல் போன்றவை வறுமையின் விளைவுகளேயாகும். எனவே மக்கள் தங்களது வறுமையைப் போக்குவதற்கு கடுமையாக முயல வேண்டும். சமூகத் தலைவர்களும் நிறுவனங்களும் அறிவையும் பொருளாதாரத்தையும் பெருக்குவதற்கு இடையறாது  மக்களை ஊக்கப்படுத்துதல் வேண்டும் என்றார்.

இதன்போது, பிராந்திய சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களான சிரேஷ்ட சுகாதார பரிசோதகர் பி. தேவராஜன், சுகாதாரக் கல்வி அதிகாரி ஏ.எல். புகாரி உட்பட பலர் கலந்த கொண்டிருந்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: