
குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலய அதிபர் எஸ்.தருமலிங்கம் தலைமையில் நடைபெற்றுது இந் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…..
மாணவராகிய உங்களுக்கு மிக முக்கியமா கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெணில் அவதானம் தேவை ஆசிரியர்கள் உங்களுக்கு கற்பிக்கின்ற போது அவதானம் தேவை இந்த அவதானமானது கல்வியில் மாத்திரம் வைத்திருக்க முடியாது அனைத்திலும் உங்களுக்கு அவதானம் தேவை.
தற்போதைய நிலையில் நாங்கள் எமது மாவட்டத்தின் கல்வியினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. எனவே இவ்விடயம் சார்பாக அன்பார்ந்த பெற்றோருக்கு ஒன்றை நான் கூறிவைக்க விரும்புகின்றேன்.
எமது மாவட்டமானது இன்று மதுபான பாவனையில் மிகவும் முன்னணியில் இருந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலை எமது இளைஞர்களின் கல்வியை சீர் குலைப்பதற்காக முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டமாகும். இதில் எமது இளைஞர்கள் ஊடுருவாத வகையில் நீங்கள் உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அவதானத்துடன் இருக்க வேண்டும். இதில் நாங்கள் அசண்டையீனமாக இருந்தால் எமது மாவட்;டத்தின் கல்வி நிலை சீர்குலையும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அறநெறிபாடசாலைகள் ஆரம்பத்தில் மாணவர்களுக்கு அறக்கருத்துக்களை புகுத்தி அதன்பால வளர்த்தெடுக்க வேண்டும்.
தற்பொது ஆட்சிமாற்றம் ஒன்று வந்திருக்கின்றது இந்த ஆட்சிமாற்றம் என்பது எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சிமாற்றத்திற்காக நாங்கள் அற்பணிப்புடன் வாக்களித்துள்ளோம். 2009 ஆண்டிற்கு பிற்பாடு நாங்கள் எட்டு பரீட்சைகளில் சித்தியடைந்திருக்கின்றோம். இந்த எட்டு பரீட்சை என்பது எட்டுத் தேர்தலைக் குறிக்கின்றது. இதில் எமது மக்கள் படிப்படியாக வாக்களிப்பு வீதத்தினை கூட்டியிருக்கின்றனர். இந்த வாக்களிப்பு வீதம் கூடியமையால் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பால் நிக்கின்றார்கள் என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இதனால் சர்வதேசத்தில் தமிழ் மக்கள் சார்பா பேசுவதற்கு உரியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாத்திரம் தான் என்ற செய்தி சர்வதேசம் எங்கும் எட்டியுள்ளது. இதனால்தான் எமது தலைவர் சம்மந்தனுடன் பேச்சு வார்த்தைகளை நடார்த்தி செல்கின்றனர். அண்மையில்கூட பாரத பிரதமர் மேடி அவர்களும் பேசிச் சென்றிருக்கின்றார். இவைகளெல்லாம் உங்களது வாக்களிப்பினால் ஏற்பட்ட மாற்றங்கள் தான். இதனை நீங்கள் தொடர்ச்சியாக மேற் கொள்ள வேண்டும் அவற்றினை மேற் கொள்வதனால்தான் இந்த நிலையை தக்கவைத்து சர்வதேசத்தின் உதவியுடன் எமது நிரந்தர தீர்வை நோக்கி பயணிப்பதற்கு உந்து சக்கியாக இருக்கும் இதுவே இன்றைய அரசியல் நிலையாகவுள்ளது இந் நிலையினைக் கருத்தில் கொண்டு எமது தமமிழ் மக்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment