அம்பாறை மாவட்டம் காரைதீவு மதுசாலைக்கு முன்பாக பிரதான வீதியில் இன்று காலை விபத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இவ்விபத்தானது துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பாதையை கடக்க
முற்பட்ட போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்களில் மோதுண்ட வேளையில் அவ்வழியே
வந்த முச்சக்கரவண்டியும் மோதுண்டமையால் விபத்து ஏற்பட்டுளளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இம் மதுச்சாலைக்கு முன்பாக கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல்வேறு
விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதோடு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment