மட்டக்களப்பில் (12.3.2015) காலை புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட புற்று நோய் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு
லயன்ஸ் கழகம், மட்டக்களப்பு றோட்டரிக்கழகம் என்பவற்றின், செலான் வங்கி ஆகிய
வற்றின் அனுசரணையுடன் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திலிருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவை சென்றடைந்தது.
இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு புற்று நோய் சங்கத்தின் தலைவர் டாக்டர்
என்.சயணொளிபவன், மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராஜர், உட்பட
லயன்ஸ் கழக தலைவர் ஏ.செல்வேந்திரன், றோட்டரிக்கழக தலைவர் ஏ.டொமினிக்
ஜோர்ஜ் உட்பட பிரமுகர்கள் பாடசாலை மாணவர்கள், மருத்துவ தாதியர்கள், மற்றும்
சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது புற்று நோயின் தாக்கம் தொடர்பாக விழிப்பூட்டும் வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் இவர்கள் தாங்கிச் சென்றனர்.
0 Comments:
Post a Comment