9 Mar 2015

மங்களகம கிராம மக்களுக்கு உலர் உணவு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான மங்களகமவில் வாழும் வறிய மக்களுக்கு இராணுவத்தின் 231ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் உலருணவுப் பொருள்கள் நேற்று (08) வழங்கப்பட்டன.

வறிய நிலையில் உள்ள 35 குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் பிரிக்கேட்டின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பாலித பெர்ணான்டோவின் வழிகாட்டலில் இப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மங்களகம விகாரையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 231ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பாலித பெர்ணான்டோ, 8ஆவது கெமுனு படைப்பிரிவின் அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இராணுவத்தின் சமூக சேவைத்திட்டத்தின் ஒரு படியாக இந்த உலருணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதாக 231ஆவது படைப்பிரிவு தெரிவித்தது.
SHARE

Author: verified_user

0 Comments: