மக்களுக்கு
நிவாரணங்களை வழங்கும் அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. எனினும்
விலை குறைப்பு செய்யப்பட்ட பொருட்களை உரிய விலக்கு விற்பனை செய்யாத 72
வர்த்தகர்களிற்கு எதிராக திருகோணமலை மாவட்ட மஜிஸ்திரேட் நீதி மன்றில்
இம்மாதம் 17 ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக திருகோணமலை
மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ஆர்.எப்.அன்வர்
சதாத் தெரிவித்தார்.
விலைக்குறைப்பு செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் குறைத்து விற்காத சந்தர்ப்பத்தில் அது தொடர்பான முறைப்பாடுகளை எந்த நேரமும் 0770110096 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரியுடன் விசாரணை உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் ஏ.எல்.தர்மலிங்கம், ஆர்.பேரின்பநாயகம், டீ.லோகாநாந்த் ஆகியோர் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் மக்கள் நலன் கருதி திருகோணமலை மாவட்டம் தோறும் மும்முரமாக செயற்பட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment