கிழக்கு
மாகாண சபையின் விவசாய நீர்ப்பாசனம் மீன்பிடி கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி
மற்றும் உணவு விநியோகம் தொடர்பான அமைச்சராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணபிள்ளை
துரைராஜசிங்கம் தமது கடமைகளை இன்று (09) உத்தியோகபூர்வமாக திருகோணமலை வரோதய
நகரிலமைந்துள்ள விவசாய அமைச்சில் பொறுப்பேற்றார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு
மாவட்ட மாகாண சபை உறுப்பினரான புதிய விவசாய அமைச்சர் உரையாற்றும் போது-
கிழக்கு மாகாணத்தை நாட்டின் நெற்களஞ்சியமாக தாம் கருதுவதாகவும் வரப்பு உயர
கோன் உயரும் என்ற ஒளவை வாக்கிற்கேற்ப தமது அமைச்சை திறம்பட செய்ய
பொறுப்பேற்பதாக கூறினார்.
அத்துடன் மக்களது அபிலாசைகளை திரட்டி
வந்து முன்வைப்பதாகவும் அதிகாரிகள் சட்டவிதிகளுக்கேற்றாற்போல் குறித்த
விடயங்களை சிறப்பாக செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறும் இதன்போது கிழக்கு மாகாண
விவசாய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா- சீனித்தம்பி யோகேஸ்வரன்- அரியனேந்திரன் மற்றும் கிழக்க மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் மாகாண சபை உறுப்பினர்கள் திணைக்கத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment