28 Feb 2015

மனைவியை கட்டுத் துப்பாக்கியால் சுட்ட கணவன்

SHARE
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அப்பகுதியை சேர்ந்த குடும்பப் பெண் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரியை சேர்ந்த செல்லான் புவனேஸ்வரி (வயது 30) என்ற குடும்பப் பெண்ணை அவரது கணவரே கட்டுத் துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக கிராம வாசிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: