28 Feb 2015

ரவி கருணாநாயக்க மட்டக்களப்பு விஜயம்

SHARE
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கல்குடா தொகுதியில் உள்ள முஸ்லிம் மக்களால் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாகவும், தமிழ் மக்களால் கறுவாக்கேணி சந்தியிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேசசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எல்.ரீ.எம்.புர்கான், கே.மோகன், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் உறுப்பினர்களான ஐ.ரீ.அஸ்மி, ஏ.எல்.ஜூனைட், முஹாஜிரீன், எம்.அஹமட், பிரதி அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம்.கலீல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: