28 Feb 2015

விபத்துக்குள்ளான மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்

SHARE
வியாழக்கிழமை (26) களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மட்.பட்டிருப்பு தேசிய பாடசாலையின் மாணவர்களை வியாழக் கிழமை மாலை வைத்தியசாலைக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் மாணவர்களைப் பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 மாணவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பேதான வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாகவும், 7 மாணவர்கள், பேர் சிகிச்சைபெற்று வீடு சென்றுள்ளதாகவும், 2 மாணவர்கள் தொடர்ந்து வைத்தியாசலையில் இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் கூறினர்.

வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் மட்.பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடை பெறவுள்ள வருடாந்த இல்ல விளையாட்டும் போட்டி நிகழ்வுக்கு மரம் ஏற்றி வருவதற்காக வியாழக்கிழமை (26) உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற மாணவர்களே, உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: