கும்புறுப்பிட்டி சின்னக்கராச்சி உப்பளம் எதிர்ப்பு போராட்ங்களில் ஈடுபட்டவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிராக குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் அரசியல் பலிவாங்களே பிரதேச சபையின் பணியில் இருந்து இடைநிறுத்தியமை என தாம் சந்தேகிப்பதாக தெரிவிக்கிறார் குச்சவெளி பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான இரத்தினசிங்கம் புஸ்பகாந்தன்.
இது தொடர்பாக குச்சவெளி பிரதேச சபையின் அமர்வு இன்று 18.02.2015 இடம் பெற்றபோது சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இ.புஸ்பகாந்தன் அவர்கள் கடந்த 13.02.2015 அன்று கும்புறுப்பிட்டி சின்னக்கரச்சியில் உப்பளம் அமைக்க உள்ள கம்பனியினருடன் குச்சவெளி பிரதேசசபையின் தவிசாளர் அ.முபாரக் அங்கு வருகை தந்த போது அங்கு எதிர்ப்பு போராட்டத்தில் முன்னோடியாக இருந்த ஒருவரின் மனைவி குச்சவெளி பிரதேச சபையின் நூலகத்தில் நூலக உதவியாளராக தற்காலிக கடமையாற்றி வருகின்றார்.
இவரின் பணி தொடர்பாக குற்றம் சாட்டி அடுத்த இரண்டு மணிநேரத்தில் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார். மீண்டும் அவரை விசாரனையின் பின் பணிக்கு அமர்த்துவோம் என பிரதேச சபையின் செயலாளரால் தெரியப்படுத்தியும் இன்றுவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வில்லை எனவே இது ஒரு அரசியல் பழிவாங்கல் சம்பவம் என தாம் சந்தேகப்படுவதாக குச்சவெளி பிரதேச சபையின் அமர்வில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான இரத்தினசிங்கம் புஸ்பகாந்தன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment