19 Feb 2015

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக காணிக்கச்சேரி

SHARE


திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவின் கீழ் விடுவிக்கப்படவுள்ள காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு காணி ஆவணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கான முதலாம் கட்ட காணிக்கச்சேரி நேற்று (17) பிரதேச செயலாளர் திருமதி.சசிதேவி ஜலதீபன் அவர்களின் தலைமையில் வெள்ளைமணல் கிராம சேவையாளர் பிரிவில் நடாத்தப்பட்டது.
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு 1984 ஆம் ஆண்டு பாரதீனப்படுத்தப்பட்ட காணிகளில் குடியுள்ள மக்களிற்கு இதுவரை காலமும் காணிக்கான ஆவணங்கள் பெற்றுக்கொள்ள முடியாது பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலை தொடர்பில் பிரதேச செயலகம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அக்காணிகளை விடுவிப்பதற்கான 80 சதவீதமான நடவடிக்கைகள் தற்போது நிறைவுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் முதற்கட்டமாக வெள்ளைமணல் கிராம சேவையாளர் பிரிவில் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திஃஅல் அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடாத்தப்பட்ட இக் காணிக்கச்சேரியில் சுமார் 416 பயனாளிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
kaani kachcheri m
SHARE

Author: verified_user

0 Comments: