18 Feb 2015

ஓய்வூதிய திணைக்களத்தினால் திருகோணமலையில் நடமாடும் சேவை

SHARE
ஓய்வூதிய வழங்கற் செயற்பாட்டினை ஒழுங்கமைத்தல் மற்றும் விதவைகள் அனாதைகள் ஓய்வூதியக் கோவைகளைச் செவ்வைப்படுத்தும்  முகமாக ஓய்வூதிய திணைக்களத்தினால் திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது முன்னோடி ஒரு நாள் நடமாடும் சேவை நிகழ்வு கடந்த 16 ஆம்  திகதி காலை 8.30 மணி தொடக்கம் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வு பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சசிதேவி ஜலதீபன் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நடமாடும் சேவையில் ஓய்வூதியக் கோவையில் விதவைகள் மற்றும் அநாதைகளின் தகவல் காணப்படுகின்றனவா என்பது பற்றியும் அவ்வாறே கோவைகளில் ஏதும் குறைபாடுகள் காணப்படின் அதனை சீர்செய்து எதிர் காலத்தில் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம் பெறும் போது அவர்களுக்கு தாமதம் ஏற்படாதவகையில் கோவைகள் ஒழுங்கமைக்கப்படவுள்ளது. 

இந்நடமாடும் சேவையில்  பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள சகல கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து சுமார் 380 க்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த நடமாடும் சேவையில் ஓய்வூதிய செயகத்தின் பணிப்பாளர் திரு.அஸ்ரப் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நடமாடும் சேவையில் ஏனைய பிரதேச செயலக காரியாலயங்களில் இருந்தும் ஓய்வூதிய விடய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: