6 Feb 2015

கிழக்கின் முதலமைச்சராக நஸீர் அஹமத்

SHARE

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமதை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார் என நம்பகமாக தெரிய வருகிறது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை காலை முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது சில உறுப்பினர்கள் ஹாபிஸ் நஸீர் அஹமதை நியமிப்பதற்கு ஆட்சேபனை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் இச்சந்திப்புக்கான தலைவரின் அழைப்பை புறக்கணித்து- சந்திப்பை பகிஷ்கரித்துள்ளார் என அறிய முடிகிறது
SHARE

Author: verified_user

0 Comments: