28 Feb 2015

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் இவ்வருடம் 4885ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள தீர்மானம்.

SHARE
2015ம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வயற் கண்டங்களில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்ப கூட்டம்) வியாழக்கிழமை (26) பிற்பகல், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன் தலைமையில் கொக்கட்டிச்சோலை பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட, புளுக்குணாவை, கடுக்காமுனை, சேவகப்பற்று மேல், கிழல், அடைச்சல், ஆகிய குளங்களிலுள்ள நீரைக் கொண்டு இவ்வருடம் மொத்தமாக 4885 ஏக்கரில் நெற்செய்கை பண்ணப்படவிருக்கின்றது. இதற்கு மேலதிகமாக சிறுநீர்பாசனம், ஏற்று நீர்பாசனம் ஆகியவற்றைக் கொண்டு 310ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட விருக்கின்றது.

சென்றவருடத்தை விட இவ்வருடம்  10வீதம் நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருக்கும் ஏக்கரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விவசாய வேலைகள் ஆரம்ப திகதி 27.02.2015, எனவும், விதைப்பு ஆரம்ப திகதி 20.03.2015, எனவும், விதைப்பு முடிக்கப்பட வேண்டிய இறுதித் திகதி 05.04.2015, எனவும், காப்புறுதி செய்யும் கடைசி திகதி 05.04.2015 எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இயற்கைமுறையிலான பசளை, மருந்துகளை பாவிப்பது, விதை நெற்களை பெற்றுக்கொள்வது, காப்புறுதிகளை மேற்கொள்வது, விவசாயிகளுக்கான கடன் வசதிகளை பெற்றுக் கொள்ளும் முறை தொடர்பாகவும் விவசாயிகளுக்கு இதன்போது கலந்து கொண்ட அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், மற்றம், விவசாய விரிவாக்கல் பிரிவு, விவசாய காப்புறுதி பிரிவு, வங்கிகளின் உத்தியோகத்தர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கமநல அமைப்பினர், கிராமசேவை உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்திற்கமைவாக புளுக்குணாவை பகுதிக்குட்பட்ட ஆற்றுச்சேனை வயற்கண்டத்தில் 320 ஏக்கரும், முதலைமடு  வயற் கண்டத்தில் 195 ஏக்கரும், குருக்கள் மடத்தார் வெட்டை வயற் கண்டத்தில் 155ஏக்கரும், ஆலயடி முன்மாரி வயற் கண்டத்தில் 165ஏக்கரும், மாவடிமுன்மாரி வயற் கண்டத்தில் 165 ஏக்கரும், மிலாத்துச்சேனை(சின்னச்சேனை, கரையாக்கயடி) வயற் கண்டத்தில் 330 ஏக்கரும், கிளாக்கொடிச்சேனை வயற் கண்டத்தில் 330 ஏக்கரும், தேவிலாமுனை வயற் கண்டத்தில் 385 ஏக்கரும், பட்டிப்பளை விறதர்மார் கண்டத்தில்  135 ஏக்கரும், நெடியமடு வயற் கண்டத்தில் 210 ஏக்கரும், பட்டிப்பளை 3ம், 5ம் கான் வயற் கண்டத்தில் 145 ஏக்கரும், நாற்பதுவட்டை வயற் கண்டத்தி;ல 95 ஏக்கரும்,

கடுக்காமுனை குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள

அம்பிளாந்துறை மேல்கிழல் வயற் கண்டத்தில் 385 ஏக்கரும், கடுக்காமுனை வயற் கண்டத்தில் 395 ஏக்கரும்,  பண்டாரியாவெளி வயற் கண்டத்தில் 395 ஏக்கரும், படையாண்டவெளி வயற் கண்டத்தில் 205 ஏக்கரும், படையாண்டகுளம் வயற் கண்டத்தில் 275 ஏக்கரும், பட்டிப்பளை வயற் கண்டத்திலட 75 ஏக்கரும்,

சேவகப்பற்று மேல் கிழல் பிரதேசத்திற்குட்பட்ட

சேவகப்பற்று குளம் வயற் கண்டத்தில் 35 ஏக்கரும், மகிழடித்தீவு குளம் வயற் கண்டத்தில் 15 ஏக்கரும்,

அடைச்சல்குளம் பிரதேசத்திற்குட்பட்ட

ஒதியங்குடா ஆறு வயற் கண்டத்தில் 225 ஏக்கர்ரும், நாவலடிப்பள்ள வயற் கண்டத்தில் 50 ஏக்கரும், நெடுஞ்சேனைக் வயற் கண்டத்தில் 50 ஏக்கரும், பெரியகாலபோட்டமடு வயற் கண்டத்தில் 150 ஏக்கரும், நீறுபோட்டசேனைக் வயற் கண்டத்தில் 25 ஏக்கரும், புதுவெளி வயற் கண்டத்தில் 185 ஏக்கரும்,  அம்பிளாந்துறை தென் வயற் கண்டத்தில் 100 ஏக்கரும் இவ்வருடம் சிறு போக நெற்செய்கை பண்ணப் படவுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: