மட்டக்களப்பு மாட்டம், தொப்பிகல பகுதியை அண்மித்துள்ள பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட, முப்பது மாணவர்களுக்கு சிறுவர் நிதியம் எனும் அமைப்பு அன்பளிப்புச் செய்த 30 துவிச்சக்கர வண்டிகளை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு புதன் கிழமை (11) கிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கிரான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதி இராணுவ கட்டளையதிகாரி மேஜர் சமிந்த புஷ்பசிறி, சிவில் இணைப்பதிகாரி மேஜர் அமரதுங்க, மற்றும் பிரதேச யெசலக அதிகாரிகள், ஆசிரியர்கள், உட்பட பலர் கலந்து தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கும் தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டியினை வழங்கி வைத்தனர்.
0 Comments:
Post a Comment