12 Feb 2015

முஜாஹிதா பாடசாலையில் நீண்ட கால கட்டிட பிரச்சினைக்கு தீர்வு கண்டுதருவதாக முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் உறுதிதியளித்துள்ளர்

SHARE
கிண்ணியா முனைச்சேனை தி/அல்/முஜாஹிதா பாடசாலையில் நீண்ட கால கட்டிட பிரச்சினைக்கு தீர்வு கண்டுதருவதாக முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் புதன் கிழமை (11) பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கிட்ம் உறுதிதியளித்துள்ளர்.

கிண்ணியா முனைச்சேனை முஜாகிதா மஹா வித்தியாலய மாணவர்கள், பெற்றார்கள் வீதி மறியல் போராட்டத்தில்  புதன் கிழமை (11) ஈடுபட்டனர்.

கடந்த 50 வருடங்களுக்கு மேல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 800க்கு  மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமானளவு  வகுப்பறை கட்டிட வசதிகள் இன்றி மிகவூம் சிரமப்படுகின்றனர், கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் மர நிழலிலும்இ கொட்டில்களிலுமே இடம் பெற்று வருகின்றன அதேவேளை மழைஇ வெயில் என்பன ஆசிரியர்கள், மாணவர்களின் தலையிலே கடந்த பல வருடங்களாக விழுந்தன. இவ்விடயங்களை பல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொண்டு வந்தும் அது பயனளிக்கவில்லை.

இவைகளை கவனத்தில் கொண்டே அப்பாடசாலை மாணவர்களும், பெற்றார்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் நிரந்தர கட்டிடம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையினை ஸ்தலத்திற்கு விஜயம் மேற்கொண்ட உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக்  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டிடம் உடனடியாக கோரிக்கை விடுத்ததிற்கினங்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புதிய நிரந்தர கட்டிடமொன்றை அமைத்துத் தருவதாக மேற்படி பிரதியமைச்சரிடம் வாக்குறுதியளித்ததிற்கினங்க வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்களும், மாணவர்களும் தங்களது வழமையான செயற்பாடுகளுக்கு திரும்பியுள்ளனர் . 
SHARE

Author: verified_user

0 Comments: