25 Feb 2015

திருமலை மாவட்டத்திற்கு நெல் கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு

SHARE
விவசாயிகளின் நெல்லை உத்தரவாத விலையினடிப்படையில் நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்வதற்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரி.திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா நேற்று (24) திருமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது தெரிவித்தார்.

விவசாயிகளிடம் இருந்து தேசிய ரீதியாக கீரி சம்பா, சம்பா என்பன 50 ரூபாவுக்கும், நாட்டரிசி 45 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது. கமநல சேவைகள் நிலையம் மூலம் உரம் கொள்வனவு செய்தவர்களின்  பெயர்பட்டியலை அடிப்படையாகக் கொண்டே நெல் இதன்போது கொள்வனவு செய்யப்படும்.

அரை ஏக்கருக்கு குறைவான வயல் காணி உள்ளவரிடம் இருந்து 200 கிலோகிராமும், அரை ஏக்கர் காணி வைத்திருப்பவர்களுக்கு 500 கிலோகிராமும்  1 ஏக்கர்  காணி வைத்திருப்பவர்களுக்கு 1000 கிலோகிராமும் ஒன்றரை ஏக்கர் காணி வைத்திருப்பவர்களுக்கு 1500 கிலோகிராமும் 2 ஏக்கர் உள்ளவரிற்கு 2000 கிலோகிராமும் என்றடிப்படையில் நெல் கொள்வனவு செய்யப்படும்.

அத்துடன் உயர்ந்த பட்சமாக ஒரு விவசாயிடம் இருந்து 2000 கிலோகிராம் மாத்திரமே நெல் கொள்வனவு செய்யப்படும். நெல் கொள்வனவின் போது பிரதேச செயலக ரீதியாக பல தரப்பினர்களைக் கொண்ட மேற்பார்வை குழுக்களும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் நெல் கொள்வனவு செயற்பாட்டை கிரமமான முறையில் மேற்கொள்ளக்கூடியதாக அமையும் எனவும் அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: