நாட்டின் கிழக்கு மாகாணத்திலும் நல்லாட்சி மலர்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில்
எதிர்வரும் தேர்தல்களில் நல்லவர்களைத் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய
பொதுமக்கள் ஒன்று படவேண்டுமென கிழக்கு மாகாண சபை புதிய உறுப்பினர் செய்யித்
அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
மாகாண சபை உறுப்பினராக
பதவிப்பிரமானம் செய்து கொண்டதையடுத்து அவரது சொந்த ஊரான மட்டக்களப்பு -
ஏறாவூர்ப் பிரதேசத்தில் பொது மக்கள் வரவேற்வு நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே மாகாண சபை உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இதனைக்
கூறினார்.
ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியிலிந்து
புன்னக்குடா வீதி வழியாக இவர் ஊர்வளமாக அழைத்துச்செல்லப்பட்டு புகையிரத
வீதியில் பொதுக் கூட்டமொன்றும் நடைபெற்றது.
தற்பொழுது நாட்டில்
ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய ரீதியிலான ஒருமைபாடு மூலம் எல்லாக்கட்சித்
தலைவர்களும் எந்தவித இனமத வேறுபாடுமின்றி நாட்டின் அபிவிருத்திற்கும்
மக்கள் நலனுக்கும் பாடுபட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டர்.
இவ்வரவேற்வு
நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளர் எம்ஐ தஸ்லிம் உபதவிசாளர்
எம்.எல் ரெபுபாசம் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் ஆதரவாளர்கள்
பலர்கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment