மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்
அதிக மாணவர்கள் சித்தியடையும் கனிஸ்ட பாடசாலையான மட்டக்களப்பு கோட்டைமுனை
கனிஸ்ட வித்தியாலயத்தின் அதிபரை இடம்மாற்றியதை கண்டித்து குறித்த
பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று காலை பாரிய
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவும் ஆர்பாட்டத்தில் இணைந்திருந்தார்.
குறித்த பாடசாலையின் அதிபர் திடீரென மட்டக்களப்பு வலய கல்வி பணிமனைக்கு
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பாடசாலையின் நிருவாகம்
சீர்குலைந்துள்ளதுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்
மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளருடன் பேச்சு நடாத்தவுள்ளதாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment