காணாமற்போனோர்
தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு
பெப்ரவரி, மார்ச் மாதங்களில் திருகோணமலையில் இரண்டு இடங்களில்
நடைபெறவுள்ளது. இடம்பெறவுள்ள இடங்களில் சிறிது மாற்றங்கள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வகையில் பெப்ரவரி 28 ஆம் திகதி
மற்றும் மாரச் முதலாம் திகதிகளில் குச்சவெளி பிரதேச செயலகத்திலும் 2 ஆம் 3
ஆம் திகதிகளில் குறித்த அமர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் மார்ச் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்த அமர்வு மாத்திரம் குறித்த திகதிகளில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
எனினும் தவிர்க்க முடியாத காரணங்களினால் மார்ச் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்த அமர்வு மாத்திரம் குறித்த திகதிகளில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.
பெப்ரவரி 28 ஆம் திகதி குச்சவெளி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள அமர்வில் புல்மோட்டை, தென்னமரவாடி, திரியாய், வாழையூத்து, வேலூர் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்தவர்களும் மார்ச் முதலாம் திகதி கோபாலபுரம், இக்பால் நகர், ஜாயாநகர், குச்சவெளி, கும்புறுப்பிட்டி, கும்புறுப்பிட்டி கிழக்கு, கும்புறுப்பிட்டி மேற்கு, நிலாவெளி, பெரிய குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது முறைப்பாடுகள் மற்றும் வாய் மூல சாட்சியங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மார்ச் 2 ஆம் திகதி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக்தில் நடைபெறவுள்ள அமர்வில் அபயபுர, அன்புவழிபுரம், அருணகிரிநாதர், சீனன்குடா, ஜின்னாநகர், கன்னியா, கப்பல்துறை, லிங்க நகர், மனையாவெளி, மட்கோவ், நாச்சிக்குடா,உவர்மலை, பாலையூற்று, பட்டணத்தெரு, புளியங்குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் சாம்பல் தீவு, சீனக்குடா, செல்வநாயகபுரம், சிவபுரி, சுமேதங்கரபுர, தில்லை நகர், திருக்கடலூர், உப்புவெளி, உவர்மலை, வரோதய நகர், வில்லூண்டி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தங்களது முறைப்பாடுகள் மற்றும் வாய் மூல சாட்சியங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
ஆணைக்குழுவானது பொதுசன அறிவித்தல்களுக்கமைய காணாமற்போனார் தொடர்பான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தவர்களில், அன்றைய தினங்களில் ஆணைக்குழு முன்பு வாய்மூல சாட்சியங்களை பதிவு செய்ய அழைக்கப்பட்டவர்களிடமிருந்து மட்டும் சாட்சியங்களை ஆணைக்குழு பரிசீலனை செய்யும்.
புதிய முறைப்பாடுகள் ஆணைக்குழு அலுவலர்களினால் பதிவு செய்யப்படுவதுடன் வாய்மூல சாட்சியங்கள் அதே தினங்களில் பரிசீலனை செய்யப்படமாட்டாது. இதற்காக பின்னர் திகதிகள் அறிவிக்கப்படும்.
0 Comments:
Post a Comment