தசைப்பிடிப்பால்
பாதிக்கப்பட்டுள்ள ஜீவன் மென்டிஸ் க்கு பதிலாக உப்புல் தரங்கவை இலங்கை
அணியின் உலகக்கிண்ண குழுவில் இணைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ICC)
அனுமதியளித்துள்ளது.
நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில்
தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை அணி வீரர் ஜீவன் மென்டிஸ்க்கு பதிலாக
உபுல் தரங்கவை குழாமில் இணைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக்
கிண்ண தொழில்நுட்பக் குழு அனுமதியளித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை
அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டடிருந்த வேளை ஜீவன் மென்டிஸ் காயத்துக்குள்ளாகியிருந்தார். இதனால் அவருக்கு ஏனைய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையேற்பட்டது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் சபையால் மென்டிஸின் வெற்றிடத்திற்கு உபுல் தரங்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அதற்கு உலகக் கிண்ண தொழில்நுட்பக் குழு இன்று அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 வயதுடைய உபுல் தரங்க 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,339 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 13 சதம், 28 அரைச்சதம், உள்ளடங்கும். அவரது ஓட்ட சராசரி 33.57 ஆகும். இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க கடந்த 2014 நவம்பர் மாதம் கட்டார்கில் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இறுதியாக விளையாடியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் இலங்கையணி அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ், இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான்,ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுடன் மோதவுள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் நியூசிலாந்துடனான போட்டியில் தோல்வியையும் ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டி எதிர்வரும் 26 ஆம்திகதி பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ளது. இதில் உபுல் தரங்க களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment