கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் ஏற்பாட்டில் இம்முறை
நிந்தவூரிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்
கௌரவிப்பு விழாவும், வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வும் கடந்த
ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் அல்- மஸ்ஹ்ர் பெண்கள் உயர் பாடசாலையில்
நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற
வைபவத்தில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ. ஹஸன் அலி, நிந்தவூர் பிரதேச
சபை தவிசாளர் எம்.எம். தாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment