மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுநகர் கிராமத்தின் திமிலைதீவு பிரதானவீதியில்
அமைந்துள்ள வடிவேல் என்பவருக்கு சொந்தமான பாமா மதுபானசாலை வெள்ளிக்கிழமை
(20) இனந்தெரியாதவர்களினால் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
இதன்போது பெருமளவிலான மதுசாரக் குடிவகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இக்கிராமத்தில் காணப்படும் வியாபாரிகள் தங்களது கடைகளை இரவு வேளைகளில் மூடி விட்டு வீடுகளுக்கு செல்வதற்கும் அச்சமடைந்த வண்ணம் உள்ளார்கள். எனவே புதுநகர் கிராமத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் பொலிசாரை வேண்டிநிற்கின்றனர்.
புதுநகர் கிராமத்தில் அண்மைக் காலமாக கோயில் உண்டியல்கள், ஒயில் நிலையம், அரிசிக்கடை, போன்றன இனந்தெரியாதவரினால் கொள்ளையிடப் பட்டுவந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்விடயங்கள் தொடர்பாக பொலிசாருக்கு அக்கிராம மக்கள் பலமுறைப்பாடுகள் செய்தும் எதுவிதபலனும் கிடைக்கவில்லை எனபொதுமக்கள் கலலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment