1 Mar 2015

விமல் வீரவன்ச இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகின்றார்.

SHARE
எம்மால் இரந்துபோடும் எலும்புத்துண்டை கௌவிக் கொண்டு எதைக் கொடுத்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுப்பார்கள், எதற்கும் எமக்குப் பின்னால் வருவார்கள் என்பதனை ஒரு போதும் முஸ்லிம் காங்கரஸ் நினைத்துவிடக் கூடாது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய கிழக்கு  மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்.பட்டிருப்பு களுவாஞ்சிகுடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……
அன்பார்ந்த தமிழ் மக்களே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக எவ்வளவோ கஸ்ரங்களுக்கு மத்தியில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது.  கிழக்கு மாகாணத்திலே நாங்கள் ஆட்சி அதிகாரத்தினை பெறவேண்டுமென இறுதிவரை போராடினோம். ஆனால் எங்களது கரங்களில் அந்த முதலமைச்சுப் பதவி வரவிட்டாலும் முஸ்லிம் காங்கரசிடம் அந்த பதவி சென்றது.

இதற்கமைவாக எமது பிரதேசத்தின் ஆட்சியில் நாங்கள் பங்குதாரர்களாக மாறவேண்டும் அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட எங்கள் பிரதேசங்களை  நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக எங்களுக்கு கல்வி, காணி உள்ளிட்ட அமைச்சுடன் இன்னுமோர் அமைச்சினைத் தரவேண்டும் எனக்கோரியிருந்தோம். இதன்பால் அதனை தருவதாக வாய் மூலமாக உறுதியளித்திருந்தனர். ஆனால் நாங்கள் தற்போது  ஒரு பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலப்பதி என்பவருக்கு அது வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தேவை கல்வி இல்லை, காணி இல்லை உள்ளுராட்சி எமக்கில்லை என்றால்  நாங்கள் என்ன முஸ்லிம் காங்கிரஸ் இரந்துபோடும் பிச்சை எலும்புத் துண்டை கவ்விக் கொண்டு போவதா? இவ்வாறு எங்களை முஸ்லிம் காங்கிரஸ் எண்ணக்கூடாது. இதனூடாக முஸ்லிம் காங்கரசுக்குக் ஒன்றைக் கூறவிரும்புகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதனைக் கொடுத்தாலும் எடுப்பார்கள், எதற்கும் எமக்கு பின்னால் வருவார்கள் என்பதனை முஸ்லிம் காங்கரஸ் ஒருபோதும் நினைக்கக்கூடாது.

சென்ற முறை கிழக்கு மாகாண சபைத்தேர்தலில்  எமது மக்கள் மேலும் சொற்ப வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கு வழங்கியிருந்தால், இந்த முஸ்லிம் காங்கரசை  இன்று நாங்கள் நாடியிருக்கத் தேவையில்லை நாங்கள் கிழக்கில் ஆட்சியை அமைத்திருக்கலாம்.  எதிர்காலத்தில் எமது மக்கள்,  சவாலாக செயற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருமித்து வாக்களிக்க வேண்டும். அதனூடாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலே இந்த முஸ்லிம் காங்கரஸ் அற்ற ஒரு ஆட்சியை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்காங்கரசின் நடவடிக்கையை நீங்கள் சிறந்த பாடமாக கற்றுக் கொண்டு எதிர்வரும் தேர்தல்களின் ஊடாக இந்த முஸ்லிம்காங்கரசுடன் சேராதவகையில் ஆட்சி அமைப்பதற்கு  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நீஎமது மக்கள் அணிதிரள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நாட்டிலே தற்போது என்ன இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை மக்கள் அறிவீர்கள் கடந்த பத்து வருடங்களாக எமது செல்வங்களை அழித்த அராஐக ஆட்சி முடிவுக்கு வந்து ஒரு புது ஆட்சி இந்த நாட்டிலே இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. சென்ற ஆட்சியில் இருந்து கொண்டு எமது மக்களை கொன்றொழித்தவர்கள் இன்று முகவரியற்று இருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கின்ற அந்த குடும்மத்தினரை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கு அவர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ள பங்காளி கட்சிகள் தற்போது முயற்சியெடுக்கின்றன.

இதன் ஒருகட்டமாக அண்மையில் நுகேகொடையில் பிரமாண்டமான கூட்டத்தினையும் அவர்கள் நடாத்தியிருந்தார்கள். இக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி அவர்கள் வருவதாக கூறியிருந்தனர். ஆனால் அவர் வரவில்லை இந்த கூட்டத்தைக் கூட்டியவர்களுள் முக்கியமானவர் யார்?  இலங்கையில் இனப்பிரச்சினை உக்கிரமான காலத்தில் அதனை தூண்டி எமது மக்களை இந்த நாட்டில் இருந்து இல்லாதொழிப்பதற்காக தொடர்சியாக துவேசத்தினைக் கக்குகின்ற ஒருவரான விமல் வீரவன்சதான் அந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

விமல் வீரவன்ச இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகின்றார். அதற்கான துவேசத்தை தமிழ் மக்களுக்கு எதிராக கக்குவதன் மூலம் தொடர்சியாக தடுத்து வருகின்றார். தமிழ் மக்களுக்கு தீர்வு என்ற வார்த்தையை எடுத்தாலும் இந்தியா சதி செய்கின்றது, அமெரிக்கா சதிசெய்கின்றது, சர்வதேசம் சதி செய்கின்றது, புலம் பெயர் தமிழர் சதிசெய்கின்றனர், என்றெல்லாம் அவர் கூறுவார்.

விமல் வீரவன்சவிக் இன்றைய நிலையென்ன அவரது பிறப்பு சான்றிதழ் பத்திரத்திலே வயது வித்தியாசப் படுகின்றது அவரது வயதை ஐந்து வருடங்கள் குறைத்துக் காட்டியுள்ளார். அவரது மனைவிக்கு இரண்டு கடவுச் சீட்டுக்கள் இருக்கின்றது. பெய்யான தகவல்களை வழங்கி இதனை பெற்றிருக்கின்றார்.  அவர் இதனை மேற்கொண்டமைக்கான காரணத்தைக் கூறவேண்டும்.   இதற்கும் இந்தியா சதிசெய்கின்றது, அமெரிக்கா சதி செய்கின்றது, டயஸ்போரா சதிசெய்கின்றது, சர்வதேசம் சதி செய்துள்ளது என்ற கருத்தை அவர் கூறப்போகின்றாரா என்னவோ தெரியவில்லை என அவர் மேலும்  தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: