6 Feb 2015

தாய்வான் விமான இயந்திரத்தில் கோளாறு என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன்

SHARE
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணி-

தாய்வான் விமானம் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட போதே அதன் இயந்திரத்தில் கோளாறு இருக்கலாம் என்பதை நான் உணர்ந்தேன் என விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பயணி ஹூயாங் ஜின் சன் தெரிவித்துள்ளார்.

"விமானம் பறக்க ஆயத்தமாகிய போது எனது இருக்கைக்கு அருகில் ஏதோ விதமான ஒரு சத்தம் கேட்டது". அதன் மூலமே விமானத்தின் இயற்திரம் சரியாக இல்லையோ ஏதோ பிழை இருக்கலாம் என தான் சந்தேகித்ததாக 72 வயதான ஹூயாங் ஜின் சன் ETTV தொலைக்காட்சி சேவைக்கு நேற்று (05) தெரிவித்துள்ளார்.

இவர் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்குவதற்கு சற்று முன்னர் விமானியொருவர் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு அவ்விமானி "விமான இயந்திரத்தின் எரிப்பீடப்பகுதி முற்றாக அணைக்கப்பட்டு விட்டது, ஆபத்து ஆபத்து" (“Mayday, mayday, engine flameout,”) என கூச்சலிட்டுள்ளார்.

ஆயினும் என்ன கோளாறு என்பதனை விமானிகளால் உடன் கண்டுபிடிக்க முடியவில்லை. இயந்திர எரிப்பீடப்பகுதி உடனே அணைக்கப்பட்டதும் விமான இறக்கையினால் தூரப்பறக்க முடியாது போய்விடும் அதாவது இயந்திர பகுதி செயலிழந்து விடும்.

இவ்வாறான தாக்கங்கள் இடம்பெற இரண்டு காரணங்கள் அமையலாம் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இயந்திரத்துக்கு போதுமான எரிபொருள் இல்லாமை, மற்றும் எரிமலை வாயு அல்லது தூசுகள் சென்று அடைபடுதலாகும். அவ்விமானி “Mayday, mayday" மேடே மேடே என அழைத்தற்கு காரணம் பொதுவாக சர்வதேச ரீதியில் ஏதேனும் பாரிய ஆபத்து திடீரென இடம்பெறுமிடத்து இவ்வாறு அழைப்பது வழக்கமான செயலாகும்.

விபத்துக்குள்ளான விமானம்  ATR 72-600 தனது சேவையை ஆரம்பித்து இன்னும் ஒருவருடங்கள் கூட முடியவில்லை. அத்துடன் இது தனது சேவையை ஆரம்பிக்க முன்னரே ஒரிஜினல் இயந்திரத்தில் கோளாறு காணப்பட்டதை தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த இயந்திர உற்பத்தியாளர் பிரட் மற்றும் வைற்னி உதவியுடன் புதிய இயந்திரம் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விமானத்தின் கறுப்புப் பெட்டியும் இனங்காணப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் விமானத்தின் இறக்கை பக்கம் அமர்ந்த ஒரு குடும்பத்தலைவர் தகவல் தெரிவிக்கும் போது விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் சிறியதாக ஒரு சத்தம் கேட்டதை தொடர்ந்து நான் விழிப்புணர்வுடன் இருந்தேன். இதனால் விமானம் விழுந்தவுடன் எனது மனைவி மற்றும் பிள்ளைகளை என்னால் காப்பாற்றக்கூடியதாக அமைந்தது. எனது 2 வயதேயான மகள் சுமார் 3 நிமிடங்கள் இதயத்துடிப்பு அடங்கி நீரில் மிதந்து காணப்பட்டான். அவசரமாக அவனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று காப்பாற்றினேன் என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: