6 Feb 2015

சிங்கப்பூரில் இணையத்தள மாநாடு இம்முறை தமிழ் மொழியில்

SHARE
சிங்கப்பூரில் கணணி தொடர்பான செயற்பாடுகள், கணணி மற்றும் இணையத்தள செயற்பாடுகள் (Tamil Internet 2015) குறித்து இடம்பெறுகின்ற வருடாந்த மாநாடு இம்முறை தமிழ் மொழியில் சிங்கப்பூரில் எதிர்வரும் மே மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

மூன்று நாட்களடங்கிய இம்மாநாட்டில் சர்வதேச ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை சமர்ப்பித்து அது தொடர்பில் ஆய்வுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

கணணி மற்றும் இணையத்தள செயற்பாடுகள் குறித்து இடம்பெறுகின்ற 14 ஆவது மாநாட்டில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒழுங்கமைப்பு குழுவின் தலைவர் எஸ்.மணியம் தெரிவி்த்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இம்மாநாடு ஜுன் முதலாந் திகதி வரை இடம்பெறும். இந்தியா, மலேசியா,அமெரிக்கா, இலங்கை மற்றும் சிங்கப்பூரிலிருந்து அரசாங்க அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்சார் வல்லுனர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

"இயற்கை மொழிச்செயலாக்கம், மற்றும் மொபைல் கணணியாக்கம்" என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கான ஆரம்ப தொடக்கம் 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழ் கணணி செயற்பாட்டுக்கென இதுவரையில் 99 எழுத்துக்களை கொண்ட தட்டச்சுப்பலகையும் சர்வதேச அளவில் குறியீடுகளை உள்வாங்கி யுனிகோர்ட் மூலம் செயற்படுத்துதலும் அமுலாக்கப்பட்டுள்ளன.
SHARE

Author: verified_user

0 Comments: