17 Feb 2015

நாளை வடக்கு கிழக்கில் தமிழ்ப்பாடசாலைகளுக்கு விடுமுறை! இலங்கைத்தமிழர்ஆசிரியர்சங்கத்தின் கோரிக்கைக்கு பச்சைக்கொடி!

SHARE
சிவராத்திரியை முன்னிட்டு நாளை 18ஆம் திகதி புதன்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சகல தமிழ்ப்பாடசாலைகளுக்கும் விசேட சமய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தப்படவேண்டுமென கல்வித்திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கைக்குஅமைவாக இவ்விசேட விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனிடம் இலங்கைத்தமிழர் ஆசிரியர்  சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாமிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளுக்கமைவாகவும் இவ்விசேட விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கில் பெரும்பாலான அதிபர்கள் ஆசிரியர்கள் சிவராத்திரி தினத்திற்கு மறுநாளான புதன் கிழமையை விடுமுறையாக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழர் ஆசிரியர் சங்கத்திடமும் மாகாண கல்விநிருவாகத் தலைமைகளிடமும் வேண்டுகோள்விடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில்  தமிழ்ப்பாடசாலைகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட இவ்விசேட விடுமுறையை கிழக்கு மாகாணகல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம் பிரகடனம்செய்தார். இதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் மற்றும் கிழக்குமாகாண கல்வியமைச்சின் கல்விச்செயலாளர் என்.எ.புஸ்பகுமார ஆகியோர் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: