ஒவ்வொரு கிராமத்திலும் தேவைகளும் பிரச்சினைகளும் அனேகம் உள்ளன. இவற்றைத்
தீர்ப்பதற்கென அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் காலம் காலமாக செயலாற்றி
வருகின்றன. மில்லியன் கணக்காக பணம் செலவிடப்படுகிறது. ஆனால் பயன் ஏதும்
விளைந்ததாகத் தெரியவில்லை. மக்களிடையே எதிர்பார்ப்பும் தங்கியிருக்கின்ற
நிலமையுந்தான் அதிகம் வளர்ந்திருக்கிறது. இந்நிலமை சமூக அபிவிருத்திக்கு
மிகவும் குந்தகமானது.
என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.
மட்.வெல்லாவெளி பிரிவுக்குட்பட்ட சின்னவத்தைக் கிராம அலகின் வருடாந்த பொதுக்கூட்டம் த.செல்வமணி தலைமையில் திங்கட் கிழமை (16) மாலை சின்னவத்தை பொதுக் கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்…
வெறும் வீதிகளும் பாலங்களும் கட்டடங்களும் பௌதீகரீதியான அபிவிருத்தியாக இருக்கின்றதேயொழிய மக்கள் வாழ்விலே அபிவிருத்தியை உண்டு பண்ணவில்லை, அவர்களது மனங்களிலே மாற்றத்தை உண்டுபண்ணவில்லை. ஏழைகள் ஏழைகளாகவேயிருக்கின்றனர். இந்நிலை மாறவேண்டுமானால் அயலாரில் தங்கியிருப்பதை விட்டு உங்களை நீங்கள் நம்புங்கள் உங்கள் கைகளை நம்புங்கள். உழைக்கும் கைகளாக அவற்றை மாற்றுங்கள்
செஞ்சிலுவைத் தொண்டர்கள் அனர்த்த காலங்களிலே மேற்கொள்ளுகின்ற அவசர நிவாரணப்பணிகயோடு நின்றுவிடாமல் சாதாரண காலங்களிலே மக்களிடையே விழ்ப்புணர்வை ஏற்படுத்தி மங்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த் பாடுபடல் வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
இவ்வருடாந்தப் பொதுக்கூட்டத்திலே இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவின் தலைவர், சின்னவத்தை செஞ்சிலுவை உறுப்பினர்கள், ஊர்ப்பெரியவர்கள் மற்றும் செஞ்சிலுவை உத்தியோகத்தர் எஸ். நிவேசன் முதலானோரும் கலந்து கொண்டிருந்தனர்.

0 Comments:
Post a Comment