மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இம்முறை தமிழர் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரு பிரதிநிதியை நீங்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் நீங்கள் நாற்பது வருடகாலமாக எமது கட்சி மீதுவைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டுக்கு நல்ல சந்தர்பம் கிடைத்துள்ளது. என ஜக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் - களுதாவளையில் இடம் சனிக்கிழமை (07) மாலை பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவத்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக இரண்டாயிரம் அண்டிற்குப் பின்னர், ஆறு தேர்தல்களில் நான் போட்டியிட்டு இருக்கிறேன் அந்த ஆறு தேர்தல்களிலும் ஒரு தடவையைத் தவிர ஏனைய 5 தடவைகளும், மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை.
ஆனால் தற்போது நல்ல சந்தர்பம் ஒன்று கிடைத்திருக்கின்றது இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சென்ற முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஒருவரை தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பியிருந்தால் தற்போது அவர் ஓர் அமைச்சராக இருந்திருப்பார் அது கட்சிக்கும் மக்களுக்கும் தற்போது கிட்டவில்லை.
இந்த களுதாவளைக் கிராமத்தைப் பொறுத்தளவில் எனால் இயன்றளவு உதவியினை மேற்கொண்டுள்ளேன். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் நோய்வாய் பட்டிருந்தும் அறாஜக அரசினை மாற்றியமைக்க வேண்டும், அதில் இருந்து மக்களை விடுபடவைக்க வேண்டும், என நினைத்து பல வேலைகளை செய்து தற்போது அரசை மாற்றி இருக்கின்றார்கள். ஆனால் இந்த மாற்றத்தினை எங்களுடைய கட்சியோ அல்லது வேறு கட்சிகள் சொல்லியோ இந்த மாற்றம் நிகழவில்லை மக்கள் ஏற்கனவே தீர்மானித்ததன் விளைவாகத்தான் நடந்தேறியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒரு கோடி ரூபாவாக உயர்த்தி இருக்கின்றது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு கூடுதலான வேலைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
எனவே எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே ஒருவரையேனும் மட்டக்களப்பிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நடாளுமன்றம், அனுப்பிவைக்க வேண்டும். நிற்சயமாக அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர், எமது மாவட்டம் சார்பான அமைச்சராக வருவார், அதன் மூலம் எமது மாவட்டத்தினை நாங்கள் வளப்படுத்த முடியும், எமது கட்சியானது தேசியக் கட்சியாகும். இந்நாட்டை வேற எந்த கட்சியும் ஆழப்போவதில்லை பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியும் தான் ஆழப்போகின்றன. எமது கட்சியின்மீது தமிழ் மக்கள் நாற்பது வருடகால நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் யாரும் மறந்துவிட முடியாது.
எனவே எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்கள் மத்தியிலிருந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஒரு பிரதிநிதியை நிற்சயமாக எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் எதிரானவன் அல்ல ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் ஒருவர் எமது கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம், எமது மட்டு மாவட்டத்தில் இருந்து ஒருவரை எதிர் வருகின்ற நடாளுமன்ற தேர்தலில் நிற்சயமாக வெற்றி பெறச் செய்யலம். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment