- கமல்-
மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவனாலயத்தின் மகிமையினை எடுத்தியம்பும் “ஈசன் அலங்காரம்” எனும் பக்திபாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை சிவனாலய முன்றலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவனாலயத்தின் மகிமையினை எடுத்தியம்பும் “ஈசன் அலங்காரம்” எனும் பக்திபாடல் இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை சிவனாலய முன்றலில் நடைபெற்றது.
சிவனாலய திருவருள் சங்கத்தினரின் பவள விழாவினை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்ட இந்த இறுவெட்டு வெளியீட்டு விழாவில் கிழக்கு மாகாண
மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின், தவிசாளர் பொன்.செல்வநாயகம், பட்டிருப்பு வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் ம.உலககேஸ்பரம், மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் ஆசியுரையினை மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் சதுர்புஜானந்தா சுவாமி நிகழ்த்தியிருந்தார், பின்னர் இறுவெட்டின் முதற் பிரதியினை செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சங்கத்தின் தலைவர் சீ.நாகலிங்கத்திடமிருந்து, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பெற்றுக் கொண்டார்.
இந்த இறுவெட்டுக்கான பாடல்வரிகளை செட்டிபாளையத்தை சேர்ந்த ஆசிரியரான த.கோபாலகிருஸ்ணன், ம.மதிவண்ணன் மற்றும் அழகு.தனு ஆகியோர், எழுதியுள்ளனர். இதற்கான பாடலலை, சங்கீதரெத்தினம் என்.ரகுநாதன், இரா.கலைச்செல்வன், க.ஜெயறுபன், எஸ்.சுலக்சன், பிரதா கந்தப்பு ஆகியோர் பாடியுள்ளதுடன், இதற்கான இசையை இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment