அம்பாறைை ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாசத்தி கிராமத்தில்
வீடு ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக இன்று காலையில்
மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு மகாசத்திபுரத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய கூலித் தொழிலாளியான தங்கவேலு இராஜேந்திரா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் சம்பவதினமான திங்கட்கிழமை இரவு உயிரிழந்தவரை தனிமையில் விட்டுவிட்டு அவரது மனைவி பிள்ளைகள் அருகிலுள்ள உறவினர் வீட்டில் நித்திரைக்குச் சென்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கணவர் வீட்டில் கழுத்தில் சங்கூசி கயிறு கட்டப்பட்ட நிலையில் நிலத்தில் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதணையடுத்து அக்கரைப்பற்று பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

0 Comments:
Post a Comment