கடந்த
அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் பல்வேறு பழிவாங்கல்களுக்கு முகம்கொடுத்து
நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மீண்டும் தம் தாய்நாட்டுக்கு
திரும்புமாறு புதிய ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
இன்று (16) ஊடக அமைச்சில் தனது கடமைகளை பொறுபேற்ற பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த அரசின் ஆட்சிகாலத்தில் சுதந்திர
ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக செயற்பட முடியாத நிலைமை காணப்பட்டது.
அதனால் அவர்களது பேனைகள் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியாது
முடங்கி போயின. இவ்வாறான கெடுபிடிகளுக்கு மத்தியில் செயற்பட்ட சில
ஊடகவியலாளர்கள் அச்சுருத்தல்களுக்குள்ளாயினர். எனவே அவர் நாட்டை விட்டு
வெளியேற வேண்டியிருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்த அரசாங்கம் அனைத்து ஊடகங்களும்
சுதந்திரமாக பணியாற்ற நடவடிக்கை எடுக்கும் என்பதால் வெளிநாடுகளுக்கு
பாதுகாப்புத் தேடி சென்ற ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்பி தமது
பேனைகளை சுதந்திரமாக பயன்படுத்துங்கள்.
அரசாங்கத்தின் கையாட்களாக அரச ஊடகங்கள்
செயற்பட்டமையினால் மக்கள் அதனை விட்டு விலகினர். அதன் பின்னர் மக்கள் அந்த
அரசாங்கத்தையும் விட்டு விலகினர். அவ்வாறான ஒரு நிலைமை அரச ஊடகங்களுக்கு
ஏற்படாது.
இந்நாட்டின் கலாசாரத்தையும் பாதுகாத்து
தரமான நிகழ்ச்சிகளை தயாரிக்கவேண்டும். புதிய அரசாங்கம் 100 நாள்
திட்டத்தில் கூறியது போன்று தகவல் அறியும் உரிமையை உறுதி செய்யும் சட்ட
மூலத்தை 100 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம். அதனூடாக
இந்நாட்டின் எந்தவொரு பிரஜையும் பிரதேச செயலகத்தினூடாக விண்ணப்பப்படிவத்தை
வழங்கி அரச நிறுவனங்களினூடாக மக்களுக்காக செய்யப்படும் திட்டங்களின்
தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்று கூறினார்.
இந்நிகழ்வில் மாதுலவாவே சோபித்த தேரர்
உட்பட பிக்குகள்- முன்னாள் ஊடக அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்ல- புதிய
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ- ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்கள் உட்பட ஏனைய
அமைச்சர்கள- ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவித்தாரன- அரசாங்க தகவல்
திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கே.டப்ளியூ.டி.என். அமரதுங்க- ஊடக
அமைச்சின் அதிகாரிகள் - பிரிவுப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment