16 Jan 2015

தற்போதைய காலகட்டத்தில் பட்டிப் பொங்கல் என்றால் என்ன என்று தொரியாதவர்கள் அதிகம் உள்ளார்கள் - எம்.கோபாலரெத்தினம்.

SHARE
தற்போதைய காலகட்டத்தில் பட்டிப் பொங்கல் என்றால் என்ன என்று தொரியாதவர்கள் அதிகம் உள்ளார்கள். அந்த வகையில் கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த பட்டிப் பொங்கல் நிகழ்வானது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

என மண்முனை எதன் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு இந்து ஊடகவியயலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த பட்டிப் பொங்கல் விழா இன்று வெள்ளிக் கிழமை (16) மட்டக்களப்பு – குருக்கள்மடம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

கிழக்கு இந்து ஊடகவியயலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

கடந்த பண்டைய காலங்களில் மிகவும் சிறப்புற நடைபெற்று வந்த இந்த பட்டிப் பொங்கல் விழாவானது இடைப்பட்ட அண்மைய காலங்களில் பட்டிப் பொங்கல் என்ற ஒன்று இல்லாமல் போய் விட்டது.

ஆனால் தற்போது பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக் கழகங்கள் வரைக்கும் படத்திடத்திலும், ஆய்வுகளுக்கும், உட்படடுத்தப்பட்டுள்ள பாடவிதானமாக பட்டிப் பொங்கல் உள்ளடக்கப் பட்டுள்ளது.  இவ்வாறு தமிழோடும், சமயத்திலும் ஒன்றிணைந்ததாக பட்டிப்பொங்கல் காணப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் ஏனைய இன மக்களும் பட்டிப் பொங்கலை கொண்டாடியுள்ளதாக பல புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன.

இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமாளின் வாகனம் நந்தி, அந்த நந்தியை சின்னமாகக் கொண்டிருக்கின்ற கொடியினைத்தான் இந்துக்கள் தமது சின்னமாகப் பயன்படுத்துகின்றார்கள். இருந்த போதிலும், நந்திக் கொடியின் முழு தத்ததுவம் தொடர்பாக பலருக்குத் தெரியாத விடையங்கள் உள்ளன.

ஆரம்ப காலத்தில் இருந்த பல மன்னர்கள், நந்தியை வணங்கி விட்டுத்தான் ஏனைய தெய்வங்களை வணங்கியிருக்கின்றார்கள். ஆரம்ப காலத்திலே நந்தி வர்மன் என்ற பெயருடைய மன்னன் இருந்துள்ளான், பல்லவர் காலம், சோழர் காலம் போன்ற கால கட்டங்களில் நந்திக்கொடி பெயர் பெற்றிருந்தது.

இராஜ இராஜ சோழ மன்னன், போரிலே வெற்றிபெற்ற பின்னர் நந்திக் கொடியை ஏற்றித்தான் தனது போர் வெற்றியைக் கொண்டாடியதாக புராணக் கதைகள் கூறுகின்றன.

எனவே நந்தி என்பது ஒரு புனிதமானது, அதுமட்டுமல்லாது கோ மாதா எங்கள் குல மாதாவாகும். எனவே இந்துக்களின் குலமரபையும், சக்தியையும் பேணுவது கோமாதா வாகும்.

எனவே எவ்வளவோ அமைப்புக்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் பொருட்படுத்தாத விடையத்தை கிழக்கு இந்து ஊடகவியலாளர்கள் இன்று கோமாதாவுக்கு பொங்கல் விழா எடுத்திருப்பதை நான் பாராட்டுகின்றேன், என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: