எயர் ஏசியா
விமானத்தின் QZ8501 கறுப்பெட்டியிலிருந்து தரவுப்பதிவேட்டுக் கருவியானது
இந்தோனேஷியா கடற்படைக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு எயார்
ஏசியா விமானம் QZ8501 யானது 162 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு
ஜாவா கடல் எல்லையில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 07.11 மணியளவில் நாங்கள்
வெற்றிகரமாக அத்தரவுப் பதிவேட்டினை கண்டுபிடித்து விட்டோம் என காலை தேசிய
போக்குவரத்து பாதுகாப்பு குழுவினரிடமிருந்து எனக்கு தகவல்
கிடைக்கப்பெற்றுள்ளதாக தேடல் மற்றும் மீட்பு நிறுவனத் தலைவர்
பிரான்சிஸ்குஸ் பம்பாங் சொய்ல்ஸ்ரோ செய்தியாளர் மாநாட்டில்
தெரிவித்துள்ளார்.
மேலும் விமானியின் அறையிலிருந்தும்
விமானியின் அருகில் வைக்கப்பட்டிருப்பதுமான குரல் பதிவேட்டினை
கண்டுபிடிப்பதில் எமது குழு நிறைந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருவதாக
தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment