தலிபான்களின்
அகோர தாக்குதல்களுக்கு உட்பட்டு பாரிய உயிரிழப்புக்களை தாங்கிய பெஷாவர்
பாடசாலை சுமார் ஒரு மாதத்திற்கு பின்னர் தற்போது மீள திறக்கப்பட்டு கல்வி
நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள்
தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பெஷாவர் பாடசாலையில்
தலிபான்கள் உட்புகுந்து பாரிய தாக்குதல்களை நடத்தி மாணவர்கள் ஆசிரியர்கள்
உட்பட்ட 150 பேரை கடந்த மாதமளவில் கொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தங்களது பச்சை நிற
சீருடையுடனும் பெற்றோர்கள் மாணவர்களை கொண்டு வந்து பாடசாலைகளில் விட்டு
விடுவதுமாக சுமார் ஒரு மாதம் விடுமுறையை கழித்து மாணவர்களும் பாடசாலை
சூழலும் ,இன்று திங்கட்கிழமை அமைந்திருப்பதாக செய்தி ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment