உயிர்வாயு தொழினுட்பம் உல்லாசப் பயணத்துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் பீபிள் இன் நீட் People
in Need நிறுவனத்தின்
திட்டப் பணிப்பாளர் ஸ்டெபனி செமின் இலங்கைக்கு ஏராளமான வெளிநாட்டு
உல்லாசப் பயணிகள் வருகின்றார்கள். அவர்கள் இலங்கையிலுள்ள சுற்றுச் சூழல்
பற்றி தமது கரிசனைகளை வெளியிடுகின்றார்கள்.
உல்லாசப் பயணத்துறையிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உள்ள வழிவகைகளில் ஒன்று மீண்டும் உயிர் வாயு தொழினுட்பத்தைப் பயன்படுத்துவதாகும் இது சுற்றுச் சூழல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என பீபிள் இன் நீட் People in Need நிறுவனத்தின் இலங்கை;கான திட்டப் பணிப்பாளர் ஸ்டெபனி செமின்
(Stephanie
Chemin- Project Director for SriLanka) தெரிவித்தார்.
இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சி நெறி இன்று புதன்கிழமை 28.01.2015 அம்பாறை வர்த்தக கைத்தொழில் சம்மேளன அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள வணிக மற்றும் உற்பத்தித் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள உணவகங்கள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள் என்பவற்றின் பிரதிநிதிகள் சுமார் 30 பேர் இதன்போது கலந்து கொண்டனர்.
இவர்கள் மத்தியில் உரையாற்றிய பீபிள் இன் நீட்
People
in Need நிறுவனத்தின் இலங்கைக்கான திட்டப் பணிப்பாளர் ஸ்டெபனி செமின் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
செக் குடியரசைச் சேர்ந்த பீப்பிள் இன் நீட் எனும் அரச சார்பற்ற நிறுவனம் உயிர் வாயுத் தொழினுட்பத்தை ஊக்குவிப்பதில் 2011 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஈடுபட்டு வருகின்றது.
அதே ஆண்டில் மட்டக்களப்பிலும்; ஜனதாக்ஸன் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பரந்து விரிந்த திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொள்வதில் இந்த உயிர் வாயுத் தொழினுட்பம் அதிகளவான நன்மைகளை ஈட்டித் தரக்கூடியது.
உயிர் வாயு தொழினுட்பத்தைப் பயன்படுத்துவதால் பல்வகைப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
உயிர்வாயு தொழினுட்பத்தின் மூலம் மீள் சுழற்சி முறையில் இயற்கைக்குக் கேடு விளைவிக்காத விதத்தில் மின்சாரம், இயற்கை எரிவாயு, பசளை, நீர் என்பனவற்றையும் சுழற்சி முறையில் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கலாம்.
இதனால் நாம் இயற்கைச் சூழலை கேடு விளைவிக்காத விதத்தில் பேணிப் பாதுகாப்பதோடு எமது பொருளாதாரத்தையும் கூடியளவு மீதப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது என்றாரவர்.
இன்றைய நிகழ்வில் பீபிள் இன் நீட்
People
in Need நிறுவனத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பீற்றர் ட்ரபோலாவ் (Petr
Drbohlav- Regional coordinator for Asia )பிரதிப் பணிப்பாளர் துவான் ஆரிபீன், அதன் இலங்கைக்கான திட்டப் பணிப்பாளர் ஸ்டெபனி செமின் (Stephanie
Chemin)
ஜனதாக்ஸன் நிறுவனத்தின் இணைப்பாளரும் வளவியலாளருமான அனுலா அன்ரன்,
விரிவாக்கல் அதிகாரி ஜே. பாஹிமா, தொடர்பு அதிகாரி செனசியா ஏக்கநாயக,
தொழினுட்பவியலாளர் ஆர். றொஸாந்த், திட்ட இணைப்பாளர் டி.எல். சமரகோன்
மற்றும் அம்பாறை மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தினரும் இதில் கலந்து
கொண்டனர்.
0 Comments:
Post a Comment