மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கான நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள்
வழங்கும் நிகழ்வு நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை (27) மாவட்ட
செயலகத்தில் நடைபெற்றது. முன்பிள்ளைப்பருவ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி
வேலைத்திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சிறுவர் நலன் அமைச்சின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சிறுவர் திணைக்களத்தின் ஊடாக இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறுவர் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது முன்பள்ளி மாணவர்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் 30 முன்பள்ளிகளுக்கான நீர் வடிகட்டி பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி.முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments:
Post a Comment