29 Jan 2015

மட்டு நகரில் உயிர்வாயு தொழிநுட்பத்தை விரிவாக்கல் தொடர்பான பயிற்சி நெறி

SHARE
இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை  குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழிநுட்பத்தை விரிவாக்கல் தொடர்பான பயிற்சி நெறி நேற்று (27)  மட்டக்களப்பு மாநகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஐரோப்பிய யூனியனின் நிதி அனுசரணையோடு சுவிற்ச் ஏசியா  எனும் இந்தத் திட்டம் ஜனதாக்ஸன் மற்றும் பீப்பிள் இன் நீட்  ஆகிய நிறுவனங்களினால் அமுல்படுத்தப்படுவதாக பயிற்சி வளவாளரும் ஜனதாக்ஸன் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளருமான அனுலா அன்ரன் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற உயிர்வாயு தொழினுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய மற்றும் நடுத்தர உணவு விடுதிகள் உணவகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உயிர்வாயு தொழினுட்பம் பற்றி விழிப்புணர்வூட்டும் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களின் ஒரு அங்கமாக இந்தப் பயிற்சி இடம்பெற்றது. உயிர்வாயு தொழினுட்பத்தை ஊக்குவிப்பதற்கான திட்டமொன்றை தேசிய மற்றும் மாகாண ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட முக்கிய பகுதிகளில் பயிற்சிப் பட்டறைகளும் அமர்வுகளும் நடத்தப்பட்டு வருவதாக அனுலா அன்ரன் தெரிவித்தார்.

நிகழ்வில் பீபிள் இன் நீட் நிறுவனத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பீற்றர் ட்ரபோலாவ், பிரதிப் பணிப்பாளர் துவான் ஆரிபீன், அதன் இலங்கைக்கான பணிப்பாளர்  ஸ்டெபனி செமின், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், ஜனதாக்ஸன்  நிறுவனத்தின் விரிவாக்கல் அதிகாரி ஜே. பாஹிமா, தொடர்பு அதிகாரி எஸ். செனசியா, தொழினுட்பவியலாளர் ஆர். ஆனந்த, திட்ட முகாமையாளர்  டி.எல். சமரகோன் மற்றும் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
bio g1

bio ga 3
bio gas4
SHARE

Author: verified_user

0 Comments: