23 Jan 2015

ரஜினி, அமிதாப்புக்கு பத்ம விருதுகள்

SHARE
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறுவோரின் பட்டியலை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதில், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சான், தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆன்மிகத் தலைவர் பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், நடிகர்கள் திலீப் குமார் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

வரும் 26ம் திகதி குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விருதுகளை வழங்க உள்ளார். விழாவில் மொத்தம் 148 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: