23 Jan 2015

வகுப்பறைக்குள் பாம்புகள் - மரநிழலில் கற்கும் மாணவர்கள்

SHARE
மட்டக்களப்பு - கிரான் - பொண்டுகள்சேனை கணபதி வித்தியாலய வகுப்பறை கூரைகளுக்குள் விஷப் பாம்புகள் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப் பாடசாலை மாணவர்கள் வகுப்பறைகளில் இல்லாமல் வௌியே மர நிழல்களில் கற்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாடசாலை விடுமுறை முடிந்ததும் மீள ஆரப்பிக்கப்பட்ட வேளை, 4 விஷப் பாம்புகள் வகுப்பறைக்குள் கூரைகளில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பின் அவை வௌியேற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று காலை பாடசாலைக்குள் மாணவர்கள் வருகை தந்தவேளை, இரு பாம்புகளை கண்டதால், அச்சத்தில் வௌியேறியுள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு அண்மையில் உள்ள காட்டு பிரதேசத்திலுள்ள பாம்புகளே வகுப்பறைக்குள் பிரவேசிப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார திணைக்களத்தின் உதவிகளைப் பெற்று விரைவாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(adn)
SHARE

Author: verified_user

0 Comments: