- கமல்-
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவிப் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச
செயலகத்தில் கடமைபுரிந்து விடுமுறை பெற்றுச் சென்ற உத்தியோகஸ்த்தர்களுக்கான
பிரிவுபசார விழாவும், ஆண்டு இறுதி நிகழ்வும் இன்று (24) பிரதேச செயலக கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் கலாநிதி
எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலக
உத்தியோகஸ்தர்கள், மற்றும் கடந்த காலங்களில் இப்பிரதேச செயலகத்தில் கடமை
புரிந்து வேறு இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகஸ்தர்களும்
இத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment