18 Jan 2015

ஐ.நா.வுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - ரணில்

SHARE
இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்று வினவியபோது, ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் எனவும் இந்த விடயத்தில் ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

மேலும் சீனாவை இந்தியாவிற்கு எதிராகவும், இந்தியாவை சீனாவிற்கு எதிராகவும் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளையாட முயற்சித்ததாகவும், அதுவே அவருக்கு தடையாக வந்து விட்டது எனவும் ரணில் குறிப்பிட்டார்.

நாம் இந்தியாவுடன் பாரம்பரிய நட்புறவைப் பேணும் அதேவேளை, சீனா, ஜப்பான் போன்ற பிற நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீனா இலங்கையில் 6 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அவற்றில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள், போட் சிட்டி காம்லெக்ஸ் ஆகிய மூலோபாய உள்கட்டமைப்பு திட்டங்களும் அடங்குவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

மேலும் சீனா உடனான சில ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யப் போவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அவரிடம் தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்குவது தொடர்பில் வினவியபோது, கொள்கை அளவில் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: