18 Jan 2015

கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் சுபைரின் யோகட் மகிழ்ச்சி விழா

SHARE
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று தனது கடமைகளை பொறுப்பெடுத்ததை அடுத்து கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஏறாவூர் பிரதேச மக்களுக்கு யோகட் பகிர்ந்தளித்து மகிழ்ச்சி விழாவினை நேற்று (17) கொண்டாடினார்.
ஏறாவூர் பிரதேச பெரியோர், பெண்கள், சிறுவர்கள் என பலரும் இவ்யோகட் மகிழ்ச்சி விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
இம்மகிழ்ச்சி விழாவுக்கு 4000 யோகட்டுக்களை ஏறாவூர் பிரதேச மக்களுக்கு பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் பகிர்ந்தளித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரியின் வெற்றி பெரியோர் முதல் சிறுவர் வரை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இன்று வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் காணக்கூடியாதாக உள்ளது. 
இப்பிராந்திய மக்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் சுந்திரமான, பாதுகாப்பான எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றனர் என்பது இம்மகிழ்ச்சி விழாக்கள் மூலம் மக்கள் அரசுக்கு விடுக்கும் செய்தியாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: