உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா
வில்லயம்ஸ், ஹோப்மன் கிண்ணத் தொடரின் போட்டியில் பங்குபற்றியபோது
ஆடுகளத்திலேயே கோப்பி வாங்கி அருந்தினார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த்
நகரில் நடைபெறும் ஹோப்மன் கிண்ண டென்னிஸ் தொடரில் இத்தாலியின் பிளாவியா
பெனட்டாவுடன் செரீனா நேற்று மோதினார்.
இதன்போது மிக களைப்பாக
காணப்பட்ட செரீனா, ஆடுகளத்தில் வைத்து தனக்கு கோப்பி தருமாறு கோரினார்.
கோப்பியை அருந்தியபின் அவர் மீண்டும் விளையாடத் தொடங்கினார்.
இப்போட்டியில்
முதல் சுற்றில் 6:0 விகிதத்தில் பிளாவியா வென்றார். எனினும் அடுத்த இரு
சுற்றுகளில் 6-3, 6-0 என செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.
போட்டியின் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தனது வெற்றிக்கு கோப்பி உந்துசக்தியாக இருந்தது எனக் கூறினார்.
‘
விமானப் பயணத்தினால் நான் சோர்வடைந்திருந்தேன். பிளாவியா மிகச் சிறப்பாக
விளையாடினார். அதனால். எனது கால்களை நகர வைப்பதற்கு எனக்கு கோப்பி
தேவைப்பட்டது’ என செரீனா கூறினார்.
33 வயதான செரீனா வில்லியம்ஸ் 18
கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். அவுஸ்திN;ரலிய பகிரங்கத் தொடரின் 5
சம்பியன் பட்டங்களும் அவற்றில் அடங்கும். இம்முறை தனது 6 ஆவது அவுஸ்திரேலிய
பகிரங்க சம்பியன் பட்டத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் செரீனா
காத்திருக்கிறார்.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment