6 Jan 2015

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்த தினம் இன்று

SHARE
பல கோடி மக்களின் இதயத்தைக் கவர்ந்த உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 48 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

ஜனவரி 6, 1967 ஆம் திகதி ரஹ்மான் பிறந்தபோது அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் திலீப்குமார் . தமிழிலும் மலையாளத்தில் பிரபலமான இசையமைப்பாளராக விளங்கிய ஆர்.கே.சேகர்தான் ரஹ்மானின் தந்தை.
1989 ஆம் ஆண்டில் அப்போது 23 வயதான திலீப் குமார், தனது தனது பெயரை அல்லாஹ்ரக்கா ரஹ்மான் (ஏ.ஆர். ரஹ்மான்) என மாற்றிக்கொண்டார்.
விளம்பரங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன் பின் தனது இசையால் கோடிக் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ஏ.ரஹ்மான், 4 தடவை தேசிய விருது, 6 தடவை தமிழக அரசின் சினிமா விருது, 15 தடவை பில்ம்பேர் 2 ஒஸ்கார் விருதுகள், அரசின் கலைமாமணி விருது இந்திய மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, உட்பட ஏராளமான விருதுகளை வென்றார். 

இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு அந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டில் ஸ்லம்டோக் மில்லியனர் படத்துக்காக இரு ஒஸ்கார் விருதுகளை ரஹ்மான் வென்றார்.

இம்முறை மில்லியன் டொலர் ஆர்ம், தி ஹன்ரட் பூட் ஜேர்னி, கோச்சடையான் ஆகிய படங்களின் 3 பாடல்களுக்காக மீண்டும் ஒஸ்கார் விருதுக்கான போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளமை குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: