5 Jan 2015

தமிழ் தேசியம் தோல்வியடையக் கூடாது பா.உ.அரியநேத்திரன்.

SHARE
இலங்கையிலே 6 ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளுக்கு, வாக்களித்திருக்கின்றோம்.  இந்த 6 ஜனாதிபதிபதிகளும் நிறைவேற்று  அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக இருந்தார்கள்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை (04) மாலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திசிபால சிறிசேனவை ஆதரவு தெரிவிக்கும், பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்……

கடந்த 65 வருடங்களாக இருந்து வருகின்ற எமது இனத்திற்கான எந்தவித உரிகைகளையும் இந்த ஜனாதிபதிகள் இதவரையில் நிறைவேற்றவில்லை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரம் இருந்தும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும், தமிழ் மக்களுக்கான தீர்வு இதுவரையில் வழங்கப்பட்வில்லை. இந்த நிலையில 7 வது ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்கும் தள்ளப்பட்டுள்ளளோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்…. எமது கட்சி அலசி ஆராய்ந்து முள்ளிவாய்க்காலிலே படுகொலை செய்யப்பட்ட 145000 மக்கள், 40000 இற்கு மேற்பட்ட மாவீரர்கள், போற்றோரை அழித்து ஒழித்தமைக்காக வடகிழக்கிலே உள்ள தமிழ் மக்கள் தமித்துவமான பண்பைக் கொண்டவர்கள் என்பதற்கிணங்க மகிந்த ராஜபக்ஸவை ஆரதரிக்கக் கூடாது என முடிவெடுத்து சரத் பொன்சேகாவை ஆதரித்தோம்.

ஆனால் தற்போதும் வந்திருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பிலும் எமது கட்சி பல தடைவ கூடி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அந்த முடிவுதான் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பது என்பதுதான். இந்த முடிவானது எமது மக்களின் முடிவாகும்.

கடந்து வந்த ஜனாதிபதித் தேர்தல்களிலும் வடகிழக்கு மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே இருந்து வந்துள்ளார்கள்.

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாறினாலும் ஆட்சி மாறாவிட்டாலும் சரி, வடகிழக்கு மக்கள் மாறமாட்டார்கள். வடகிழக்கு மக்கள் மகிந்த ராஜபக்சவை எதிர்த்துள்ளார்கள் என்ற செய்தி உலகில் பரப்பப்படும்.

முள்ளிவாய்காலில் 145000 அப்பாவி மக்களைப் படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சவைப் புறக்கணித்துள்ளார்கள், விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இன்றுவரை நிம்மதியில்லை அவர்களை, புலநாய்வாளர்கள் பின்தொடர்கின்றார்கள். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள்  அதிகரிக்கின்றன. நில ஆகக்கிரமிப்பக்கள் தொடர்கின்றன. இவ்வாறான நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்ற இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஸ தற்போது வெட்கம் இல்லாமல் வடகிழக்கு மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார்.

வடகிழக்கிலே 12 தமிழருக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் இராணுவ மயமாக்கல் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

தமிழ் மக்களைக் கொடுமை செய்த, அட்டூழியம் செய்த இனவெறியயாட்டம் கொண்ட மஹிந்த ராஜபக்சவை துரத்த வேண்டும் என்பதற்காகத்தான் எமது வடகிழக்கு மக்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்கழிக்க வேண்டும்.  வடகிழக்கிலுள்ள மக்கள் மஹிந்த ராஜபக்சவை விரும்பவில்லை என்பதற்காக எமது மக்கள் மைத்திரிபால சிறிசேனவக்கு வாக்களிக்க வேண்டும்.

யார் ஜனாதிபதியாக வந்தலும், இலங்கையிலே இருக்கின்ற ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தமிதேசியக் கூட்டமைப்பு அந்த ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடாத்தத்தான் வேண்டும். எனவே யாராவது இந்த தேர்தலை பகிஸ்கரிக்காமல் மஹிந்தவக்கு எதிராக அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

தற்போது மஹிந்த ராஜபக்ஸ பல அமைப்பாளர்களை அiனுப்பியிருக்கின்றார், களி றோட் போடுவதற்கு ஒரு அமைப்பாளர், கிறவல்; றோட் போடுவதற்கு ஒரு அமைப்பாளர், தார் றோட் போடுவதற்கு ஒரு அமைப்பாளர், கொங்கிறீட் றோட் பேடுவதற்கு இன்னுமொரு அமைப்பாளர், கார்பட் றோட் போடுவதற்கு இன்னுமொரு அமைப்பாளர், தார் றோட் போடுவதற்கு மற்றுமொரு அமைப்பாளர்,  என றோட் பேடுவதற்கு மட்டும் 6 அமைப்பாளர்கள் உள்ளார்கள். மக்களின் பணத்தை எடுத்து இவ்வாறு அமைப்பாளர்களை உருவாக்கி, றோடுகள் போடுவதற்கு நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி செல்லுமிடமெல்லாம் குழந்தைகளைத் தூக்கி முத்தமிடுகின்றார். ஆனால் முள்ளிவாய்க்காலில் எத்தனை குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டன, எத்தனை கர்ப்பிணித்தாய்மார்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், இதுபற்றி மஹிந்த ராஜபக்சவுக்குத் தெரியுமா?

பிரதியமைச்சர் வி.முரளிதரன் மக்களுக்கு வினியோகிக்கும் வெட்சீட்டுகளும், பாய்ளுக்கும் செலவு செய்த பணம், அவரின் வீட்டுப் பணம் அல்ல மக்களின் அது பணமாகும்.

பிரதியமைச்சர் ஹில்புல்லாவிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. அதனால்தான் அவர் கூறுகின்றார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றமையினால் இரத்தக்களரி ஓடப்போகின்றது என்று.  ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக்க கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதிகாப் போட்டியிடும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதனால் என்ன இரத்தக்களரி வரும்.

இவ்வாறு மக்களை ஏமாற்றிக் கொண்டு பல அமைப்பாளர்களும். அமைச்சர்களும். பிரதி அமைச்சர்களும், பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.
இந்த தேர்தலில் மைத்திரி வென்றாலும். மஹிந்த தோற்றாலும் தமிழ் தேசியம் வெல்ல வேண்டும், தமிழ் தேசியம் தோல்வியடையக் கூடாது, என்பதூன் எமது நோக்கமாகும். என அவர் தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: