மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை சயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் திருவாதிரைத் தீர்த்தோற்சவம் இன்று திங்கட் கிழமை காலை 8.30 மணியளவில் களுவளை சமுத்திரத்தில் இடம்பெற்றது. ஆலய பரிபாலனசபைத் தலைவர் வேல்வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிள்ளையார் மூசுக வாகனத்திலும், முருகன் வள்ளி தெய்வயானை சமேதராய் மயில் வாகனத்திலும், சிவனும் பார்வைதியும் இடப வாகனத்திலும் உள்வீதி வெளி வீதி வலம் வந்து களுதாவளை சமுத்திரத்தில் மேள, தா, வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகர ஓசையுடன் தீர்ததோற்சவம் இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

0 Comments:
Post a Comment