5 Jan 2015

அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையானது, அதாவுல்லாவின் விக்கெட் வீழ்ந்தது மு.கா பக்கம்

SHARE
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று இரவு (03) அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், எம்.அஸ்லம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எம்.ஜெமீல், தயா கமகே, கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான முழக்கம் அப்துல் மஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், உதவிச் தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா, உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஐ.எல்.முனாப், என்.எல்.ஜாசிர் ஐமைன், கட்சியின் ஸ்தாபகப் பொதுச் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், கட்சியின் உச்சபீட உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹிர், யு.எம்.வாஹித், எஸ்.எல்.எம்.பழில் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
குறிப்பாக தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருக்கும் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இக்கூட்டத்தில் வைத்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸின் அசைக்க முடியாத இரும்புக் கோட்டை என்பதும் இக்கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கான கட்சிப் போராளிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: