சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும்
குழுவினரினால் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு நிகழ்வொன்று வியாழக்கிழமை(11.12.2025) மட்டக்களப்பு சத்திருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதைய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், என 20 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் முகாமையாளர் ரசிக்க குணவர்த்தன, அக்குழுவின் பணிப்பாளர் சுதேஸ் நந்திமாசில்வா, திட்ட அதிகாரி தி.ஷாமினி, ஊடக இணைப்பாளர் கெலும் விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டு சிறைக்கைதிகளின் உரிமைகள் தொடர்பிலும், கைதிகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.
கொழும்பை தலைமையமாக கொண்டு இயங்கும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் இக்குழு “கைதிகளின் உரிமைகளை பாதுகாத்து மனித பெருமையினை உயர்த்துவோம்" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் வழிப்புணர்வுகளை மேற்கொள்வதற்கான செயற்றிட்டத்தின் முதல் அங்கமாகவே இன்றயத்தினம் மட்டக்களப்பில் இவ்விழிப்பணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. வ்வாறான விழிப்பணர்வுகள் வடக்கு கிழக்கு உட்பட 25 மாவட்டங்களிலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அக்குழு இதன்போது தெரிவித்தது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் இக்குழுவினர் கைதிகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான சட்ட ரீதியான உதவிகளை கடந்தஎபத்து வருடங்களிற்கு மேலாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment